சுடச்சுட

    

    இன்று முதல்விவசாயிகளுக்கு கிராம அடிப்படைப் பயிற்சி

    By நாமக்கல்  |   Published on : 05th January 2015 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உழவர் பயிற்சி நிலையத்தின் சார்பில் நாமகிரிப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு கிராம அடிப்படைப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்குகிறது.

    இதுகுறித்து, உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பாலசுப்ரமணி, வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகளுக்கான கிராம அடிப்படைப் பயிற்சி நாமகிரிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது.

    இரண்டு நாள் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, வேளாண் வணிகம், விதைச் சான்றுத் துறைகள், மண் ஆய்வுக் கூடம், பட்டு வளர்ச்சித் துறை, வனத்துறை மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதில் விவசாயிகள் மற்றும் உழவர் மன்ற அமைப்பாளர்கள் பங்கேற்றுப் பயன்பெறலாம். பயிற்சி தொடர்பான விவரங்களுக்கு, நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai