Enable Javscript for better performance
குமாரபாளையத்தில் 20 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலை- Dinamani

சுடச்சுட

    

    குமாரபாளையத்தில் 20 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலை

    By குமாரபாளையம்  |   Published on : 05th January 2015 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குமாரபாளையம் நகராட்சி, சுற்று வட்டாரப் பகுதிகளில் 20 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன.

    குமாரபாளையம் நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருச்செங்கோடு வட்டாட்சியர் குப்புசாமி தலைமை வகித்தார். குமாரபாளையம் நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

    குமாரபாளையம் நகராட்சி, தட்டாங்குட்டை, குப்பாண்டபாளையம், செளதாபுரம், சமயசங்கிலி, பல்லக்காபாளையம் மற்றும் படைவீடு பகுதிகளில் பயனாளிகளுக்கு முதல் கட்டமாக 20 ஆயிரம் வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. இவை நியாய விலைக்கடைகளில் அனைத்து வேலை நாட்களில் வழங்கப்படும்.

    பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். நகர்மன்ற துணைத் தலைவர் கேஎஸ்எம்.பாலசுப்பிரமணி, அதிமுக நிர்வாகிகள் சி.ஜெ.அர்ச்சுனன், சிங்காரவேலு, மோகனசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai