சுடச்சுட

    

    சிமென்ட் விலையைக் குறைக்க காங்கிரஸ் கோரிக்கை

    By நாமக்கல்,  |   Published on : 05th January 2015 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் சிமென்ட் விலை உயர்வால் கட்டுமானத் தொழில்கள் பாதிக்கப்படுவதால், அதன் விலையைக் குறைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    வெண்ணந்தூர் நகர காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம், நகரத் தலைவர் சிங்காரம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் காசி பெருமாள், முனியப்பன் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் செல்லியம்மன் மணி வரவேற்றார்.

    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: விசைத்தறி நெசவுத் தொழில் கடந்த 3 ஆண்டுகளாகப் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்து வரும் நிலையில், விசைத்தறித் தொழிலுக்கு 15 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விசைத்தறித் தொழிலுக்கான மின் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும்.

    கடந்த ஒரு மாதத்தில் சிமென்ட் விலை ஒரு மூட்டைக்கு ரூ.70 உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சிமென்ட் விலையைக் குறைக்க வேண்டும். கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். மது விற்பனையைத் தமிழகத்தில் முழுவதும் தடை செய்ய வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai