Enable Javscript for better performance
நகைக் கடையில் திருட்டு:பெண் கைது- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தியில் நகைக்கடையில் நகை வாங்குவது போல் 3 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற பெண் கைது செய்யப்பட்டார்.

    பரமத்தியைச் சேர்ந்த கங்காராம் மகன் ரமேஷ் (35), நகைக்கடை உரிமையாளர். நகைக் கடைக்கு சனிக்கிழமை இரவு நகை வாங்க பெண் ஒருவர் வந்துள்ளார். அவரிடம் கடை ஊழியர்கள் நகைகளை எடுத்துக் காட்டினர். இரண்டு பவுன் மோதிரம், ஒரு பவுன் தோடு ஆகியவற்றைத் திருடிக் கொண்டு வேறு நகை வாங்காமல் அப்பெண் வெளியேறினார். ஊழியர்கள் நகைகளை எடுத்து வைக்கும்போது மோதிரம் மற்றும் தோடு ஆகியவை காணாமல் போனது தெரிய வந்தது. சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் கடைக்கு வந்து சென்ற பெண்ணைப் பிடித்து விசாரித்ததில் மூன்று பவுன் நகைகளைத் திருடியது தெரியவந்தது. பின்னர் அந்தப் பெண்ணை பரமத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    நகை திருடிய பெண் பரமத்தி ஆசிரியர் காலனியைச் சேர்ந்த தசரதன் மனைவி ஜெயந்தி (40) என்பது தெரியவந்தது.

    பரமத்தி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து ஜெயந்தியைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai