Enable Javscript for better performance
நாமக்கல்லில் மாநில கராத்தே போட்டி- Dinamani

சுடச்சுட

    

    உலக ஒருங்கினைந்த கராத்தே கூட்டமைப்பிற்கு உள்பட்ட சோட்டோ-சோட்டோகான் கராத்தே சங்கத்தின் 32-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கராத்தே போட்டி நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    உலக ஒருங்கிணைந்த கராத்தே கூட்டமைப்பின் திட்டங்களுக்கு உள்பட்டு பெல்ட், உடல் எடைப் பிரிவு மற்றும் வயது அடிப்படையில் கட்டா, குமிட்டே, வெப்பன் டெமான்ஸ்ட்ரேசன், குருப் கட்டா உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

    இப்போட்டிகளில், நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    அசோகன், கருப்பண்ணன், செல்வக்குமார், சண்முக சுந்தரம், தினேஷ் குமார், நரேஷ், பிரதாப், நகுல், நிஷாந்த், தருமராஜ், சக்திவேல் உள்ளிட்டோர் நடுவர்களாகப் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் பிப். 22 மற்றும் பிப்.23-ஆம் தேதிகளில் நடைபெறும் தெற்காசிய தற்காப்புக் கலைப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

    பரிசளிப்பு விழாவில் சோடோஸ் சோடக்கான் கராத்தே பயிற்சிப் பள்ளியின் தலைமைப் பயிற்சியாளர் உமாகாந்தன் வரவேற்றார். கடந்த ஆண்டிற்கான சிறந்த நடுவர்களுக்கான விருது திருச்சி செல்வக்குமார் மற்றும் சேலம் கருப்பண்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    கராத்தே சங்கச் செயலர் கீர்த்திவர்மன், பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். தற்காப்புக் கலைப் பயிற்சியாளர்கள் அசோக்ராஜ், ஜோதி ராமலிங்கம், வாசுதேவன், அசோகன், சுரேஷ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். கராத்தே சங்க துணைத் தலைவர் நடராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai