Enable Javscript for better performance
நாமக்கல் மாணவர்கள் இருவர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    குஜராத் மாநிலத்தில் வரும் 6-ஆம் தேதி துவங்கும், தேசிய அளவிலான இளம் சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் மாநாட்டில் நாமக்கல்லில் இருந்து இரண்டு மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

    கலை, பண்பாட்டுத் துறை மூலம் ஜவகர் பால்பவன் நாமக்கல்லில் செயல்பட்டு வருகிறது. புதுதில்லியில் உள்ள தேசிய பால்பவன் சார்பில் வரும் 6-ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் சூனாகாட் பால்பவனில் தேசிய அளவிலான இளம் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மாநாடு நடக்கிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வி.கவிமயில், மோசி டேனியல் தேவசகாயம் ஆகிய இரண்டு மாணவர்கள் மாநாட்டில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள், நாமக்கல் மாவட்டத்தில், பாரம்பரிய நீர் மேலாண்மை, வனப்பாதுகாப்பு மற்றும் வீட்டு வைத்திய முறைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளைப் புகைப்படங்களுடன் சமர்ப்பிக்கின்றனர்.

    மாணவர்களுக்குப் பாதுகாவலராக, மாடல் பள்ளி முதல்வர் எம்.சார்லிகேத்தரின் உடன் செல்கிறார். ஏற்பாடுகளை ஜவஹர் சிறுவர் மன்றத் திட்ட இயக்குநர் மா.தில்லை சிவக்குமார் செய்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai