சுடச்சுட

  

  ராசிபுரம் அரசுக் கல்லூரியில் வரும் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் வேலை வாய்ப்பற்றவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் வேலையற்ற 18 வயது முதல் 35 வயதிற்குள்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

  வேலை தேடுவோர், குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல், நகல்களுடன் ராசிபுரம் ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு வரும் 6-ஆம் தேதி காலை 9 மணிக்குள் வர வேண்டும். முகாம் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்.

  5-ஆம் வகுப்பு முதல் பட்டயப்படிப்பு வரை படித்துள்ள, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா ஆண், பெண் இருபாலரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai