சுடச்சுட

    

    புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்

    By நாமக்கல்,  |   Published on : 05th January 2015 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிதாகத் தொடங்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் தங்கமணி மோதிரம் அணிவித்தார்.

    பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இங்கு முதல் பிரசவம் அண்மையில் நடைபெற்றது. காடச்சநல்லூர் ராஜேஸ்வரி, வஉசி நகர் கலையரசி ஆகியோருக்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. சுகாதார நிலையத்தில் முதல் பிரசவத்தை வெற்றிகரமாகச் செய்த மருத்துவர்களைப் பாராட்டிய தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, இரண்டு குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார்.

    குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், ஜனனி சுரக்ஷô யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.700 உதவித் தொகை, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் மூலம் இரண்டாவது தவணைத் தொகையான தலா ரூ.4 ஆயிரத்தைப் பெற்றோர்களிடம் அமைச்சர் வழங்கினார்.

    பள்ளிபாளையம் நகர் மன்றத் தலைவர் வெள்ளியங்கிரி, மருத்துவர்கள் பிரபுராம், ஜெயகவுதமன், சுப்பிரமணியம், சுகாதார மேற்பார்வையாளர் சுரேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், ஒன்றியக்குழுத் தலைவர் செந்தில், ஊராட்சி மன்றத் தலைவர் முனியப்பன், டிசிஎம்எஸ் தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai