Enable Javscript for better performance
ராசிபுரம் வித்யாநிகேதன் பள்ளிக்குத் தங்கம்- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் வித்யாநிகேதன் பள்ளிக்குத் தங்கம்

    By ராசிபுரம்,  |   Published on : 05th January 2015 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய அளவிலான வளையப்பந்து போட்டியில் ராசிபுரம் வித்யா நிகேதன் பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர்.

    தேசிய பள்ளி விளையாட்டுக் குழுமத்தின் சார்பில், தேசிய அளவிலான வளையப்பந்து போட்டி சேலம் செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

    இப்போட்டியில், தமிழ்நாடு விளையாட்டு அணி சார்பில், ராசிபுரம் வித்யா நிகேதன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று குழு மற்றும் தனி நபர் போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

    17 வயதுக்குக் கீழ்ப் பிரிவு தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் எஸ்.அபிஷேக், மாணவி எம்.ஹரிதா ஆகியோர் தங்கப் பதக்கமும், இதே பிரிவில் மாணவர் என்.கோகுலகிருஷ்ணன், 19 வயதுக்கு கீழ்ப் பிரிவு குழுப் போட்டியில் மாணவி ஏ.ரம்யா ஆகியோர் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளனர்.

    மாணவி கீர்த்தனா 19 வயதுக்கு கீழ்ப் பிரிவு குழுப் போட்டியில் தங்கம், தனிநபர் போட்டியில் வெள்ளியும் பெற்றுள்ளார். மாணவி ஜி.தமிழ்மணி குழுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

    மேலும், வித்யா நிகேதன் இண்டல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.கோபி குழுப் போட்டியில் வெள்ளியும், தனிநபர் போட்டியில் வெண்கலமும் பெற்றுள்ளார். இப்போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் மொத்தம் 7 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai