சுடச்சுட

  

   விதிமுறைகளை மீறிக் கொள்ளையடிக்கப்படும் கனிம வளங்களைப் பாதுகாக்க நடவடிக்கையெடுக்க ஆட்சியரிடம் கிராம மக்கள் முறையிட்டனர்.

  நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே செளதாபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

  கடந்த 1968-ஆம் ஆண்டு ஒரு நிறுவனத்துக்காக விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி சுமார் 67 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியது. இங்கு சுமார் 5 ஏக்கர் பரப்பை வெடி வைத்துத் தகர்த்து, கால்சீட் மற்றும் வெள்ளைக்கற்களை அந்நிறுவனம் கடந்த 1988-ஆம் ஆண்டு வரை எடுத்தது. இதனையடுத்து 1988 முதல் 2002 வரை வேறு நிறுவனம் இங்குள்ள கனிம வளங்களை எடுத்தது.

  2002-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மற்றொரு நிறுவனம் கனிம வளங்களை எடுத்து வருகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு கனிமக் கொள்ளை பிரச்னை வெளியில் வந்த பிறகு, இங்கு கல் எடுக்கப்படவில்லை. ஆனால் அங்கிருந்து தினமும் 50 லோடு அளவுக்கு மண் வெளியில் எடுத்துச் செல்லப்

  படுகிறது.

  கடந்த 47 ஆண்டுகளாக இங்கிருந்து கனிம வளங்கள் எவ்விதக் கண்காணிப்பும் இல்லாமல் தனியார் நிறுவனங்களினால் சூறையாடப்பட்டுள்ளது. இந்த நிலம் தனியார் நிறுவனமொன்றின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  விவசாயிகளிடம் நிலத்தைப் பெறும்போது குறிப்பிட்ட காலத்திற்கு கனிமங்களை எடுத்துக் கொண்டு, நிலத்தை மீண்டும் ஒப்படைப்பதாக நிலம் கையகப்படுத்தும்போது அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்ட நிலையில், இப்போது பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இப்பகுதி விவசாயிகளின் நில உரிமையை மீறிய செயல்.

  மேலும், 47 ஆண்டுகளில் அருகில் உள்ள விவசாய நிலங்கள், நீர் ஆதாரங்கள், குடியிருப்புகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தை மீண்டும் நில உரிமையாளர்களுக்கு வழங்குவதோடு, வாழ்வாதாரத்தை இழந்த இக்கிராம மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் விதிகளை மீறி கனிம வளங்களைச் சுரண்டிய தனியார் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கையெடுக்க வேண்டும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai