சுடச்சுட

  

  தீர்மானப் புத்தகத்தில் வார்டு உறுப்பினர்களின் கையெழுத்தை ஊராட்சித் தலைவர் போலியாகப் போட்டுள்ளதாக உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

  திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தோ.கவுண்டம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 5 பேர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

  ஊராட்சித் தலைவரின் பாரபட்சமான செயல்பாடுகளைக் கண்டித்து, மாதம்தோறும் நடைபெறும் ஊராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானப் புத்தகத்தில் 5 உறுப்பினர்கள் கையெழுத்துப் போடாமல் இருந்தோம். கடந்த 7 மாதங்களாக தீர்மானப் புத்தகத்தில் 5 பேரும் கையெழுத்துப் போடவில்லை. இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி நடந்த கூட்டத்துக்குச் சென்றபோது, தீர்மானப் புத்தகத்தில் எங்களின் கையெழுத்தை ஊராட்சித் தலைவர் போலியாகப் போட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்.

  போலி கையெழுத்து மூலம் தீர்மானங்களை நிறைவேற்றி, தலைவர் என்ன மோசடி செய்துள்ளார் என்பது தெரியவில்லை. இதனால் தீர்மானப் புத்தகம், ரொக்கப் புத்தகம் ஆகியவற்றை ஆய்வுசெய்து ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கையெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai