Enable Javscript for better performance
கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவர் கைது

    By பரமத்திவேலூர்,  |   Published on : 06th January 2015 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி மற்றும் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

    வேலூரைச் சேர்ந்த செல்லக்கனி மகன் சேட்டு (39). ஞாயிற்றுக்கிழமை இரவு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சலங்கைசக்தி (எ) சக்திவேல் (42), கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் தருமாறு மிரட்டியுள்ளார்.

    சேட்டுவின் சட்டையில் இருந்து ரூ.150ஐப் பறித்துக்கொண்டு, கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம் சக்திவேல்.

    சேட்டுவின் புகாரின் பேரில் பரமத்திவேலூர் போலீஸார் சக்திவேலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பேக்கரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பரமத்தியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பன்னீர்செல்வத்திடம் (47), பழரசம் சாப்பிட்டுப் பணம் கொடுக்காமல் கத்தியைக் காட்டி மிரட்டிய பரமத்தி வெங்கடேஷ் என்பவரை பரமத்தி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai