சுடச்சுட

    

    குடிநீர்க் கட்டண உயர்வைக் கண்டித்து ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

    By ராசிபுரம்  |   Published on : 06th January 2015 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் நகராட்சி குடிநீர் இணைப்பிற்கான கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் சார்பில் திங்கள்

    கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக நகரச் செயலர் நா.ஜோதிபாசு தலைமை வகித்தார். தமிழர் தேசிய முன்ணனி மாவட்டத் தலைவர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் எஸ்.மணிமாறன், மனித நேய மக்கள் கட்சியின் நகரத் தலைவர் பா.ராஜாமுகமது, சேகுவாரா நற்பணி இயக்கத் தலைவர் ஆர்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு வாரம் இருமுறை குடிநீர் வழங்க வேண்டும், உயர்த்தப்பட்ட குடிநீர்க் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    ம.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் வி.முத்துசாமி, மாவட்டப் பிரதிநிதி வே.சந்தானம், நகர அவைத் தலைவர் சுப்பிரமணி, இளைஞர் அணி நிர்வாகி பாபு, நகரப் பொருளர் கெளரிசங்கர் சி.பி.ஐ. (எம்) வட்டாரச் செயலாளர் ஜி. செல்வராஜ், வட்டாரக் குழு நிர்வாகி எம்.ஜி.ராஜகோபால், சேகுவாரா நற்பணி இயக்க நிர்வாகிகள் விஜய் ஆனந்த், கிஷோர் குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai