Enable Javscript for better performance
தேசிய லெக் கிரிக்கெட்: தில்லி அணி சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய லெக் கிரிக்கெட்: தில்லி அணி சாம்பியன்

    By குமாரபாளையம்  |   Published on : 06th January 2015 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய அளவிலான லெக் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணியை

    40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தில்லி அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அளவிலான லெக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 3 நாள்களாக நடைபெற்றன. இதில், தில்லி, மத்தியப் பிரதேசம், கோவா, உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் உள்பட 16 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பஙகேற்றன.

    அரையிறுதிப் போட்டியில் தமிழக அணி, மகாராஷ்டிரா அணியையும், தில்லி அணி, தேசிய கிரிக்கெட் அணியையும் (என்சிஆர்) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

    இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 10 ஓவர்கள் போட்டியாக நடத்தப்பட்டதில், முதலில் ஆடிய தில்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் சேர்த்தது.

    தில்லி வீரர் பாஜா சிறந்த முறையில் லெக்கிக் செய்து 84 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து ஆடிய தமிழக அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. தமிழக அணி வீரர் தினேஷ் அதிக பட்சமாக 96 ரன்கள் சேர்த்தார். இதனால், தில்லி அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

    இத்தொடரில் தமிழக வீரரான எஸ்.சபம் நான்கு போட்டிகளில் விளையாடி சிறந்த முறையில் லெக்கிக் செய்து 202 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தமிழக வீரர் எஸ்.சந்திரமோகன், நான்கு போட்டிகளில் 8 ஓவர்கள் பந்து வீசி 23 ரன்களைக் கொடுத்து 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தில்லி அணியின் போலார்டு, அதிக பட்சமாக 10 கேட்ச்கள் பிடித்தார்.

    வெற்றி பெற்ற அணிக்கு சர்வதேச லெக் கிரிக்கெட் கவுன்சில் பொதுச் செயலர் ஜெ.பி.வர்மா, ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.விஜயகுமார், தலைவர் எஸ்.யுவராஜா, தாளாளர் எஸ்.செல்வராஜ், தமிழ்நாடு லெக் கிரிக்கெட் சங்கப் பொதுச் செயலர் ஏ.பிரபு உள்ளிட்டோர் கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai