Enable Javscript for better performance
நியாயவிலைக் கடையை இடமாற்றம் செய்யக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    நியாயவிலைக் கடையை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

    By நாமக்கல்,  |   Published on : 06th January 2015 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியிருப்புகள் அதிகம் உள்ள கிராமத்திற்கு நியாயவிலைக் கடையை மாற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சின்னகோட்டப்பாளையம் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்

    கிழமை அளித்த மனு விவரம்:

    பெரியகோட்டப்பாளையத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் சின்னகோட்டப்பாளையம் பகுதி மக்கள் பொருள்களை வாங்கி வருகின்றனர்.

    22 குடும்பங்கள் மட்டுமே உள்ள பெரியகோட்டப்பாளையத்தில் நியாயவிலைக் கடை உள்ளது. ஆனால், 200 குடும்பங்கள் உள்ள சின்னகோட்டப்பாளையம் கிராம மக்கள் 2 கி.மீ தொலைவு நடந்து சென்று பொருள்கள் வாங்க வேண்டியுள்ளது. இதனால் நியாய விலைக் கடையை சின்னகோட்டப்பாளையத்துக்கு மாற்ற வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai