சுடச்சுட

    

    நிறுத்தப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்க பெண்கள் கோரிக்கை

    By நாமக்கல்,  |   Published on : 06th January 2015 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே அ.குன்னத்தூர் சாமிநாதபுரம் காலனியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

    சாமிநாதபுரம் காலனியில் உள்ளவர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, உரிய தகுதி இருந்தும், உதவித் தொகையை கடந்த ஓராண்டாக நிறுத்தி உள்ளனர். தகுதி இல்லாதவர்களுக்கு தொடர்ந்து உதவித்தொகை

    வழங்கப்படுகிறது.

    இதனால் உரிய வகையில் விசாரணை செய்து உதவித் தொகையை வழங்க ஆட்சியர் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai