சுடச்சுட

    

    பரமத்திவேலூரில் ஆருத்ரா தரிசனம், திருக்கல்யாண உற்சவம்

    By பரமத்திவேலூர்  |   Published on : 06th January 2015 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் திருஞான சம்பந்தர் மடாலயத்தில் சிவகாமசுந்தரி, நடராஜர் திருகல்யாண உற்சவம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சிவ பெருமானுக்கு 508 தேங்காய்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாராயணம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு 33 வகையான நறுமணப் பொருள்கள், நறுமண திரவியங்களால் பூஜைகள் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், தங்க ஆபரணங்களால் சொர்ண அபிஷேகம் நடைபெற்றது.

    காலை 8 மணிக்கு 508 தேங்காய்களால் சிவலிங்கம் அமைக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. 9 மணிக்கு மங்கள இசை மற்றும் திருமுறை பாராயணத்துடன் சிவகாமசுந்தரி, நடராஜர் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    நடராஜ மூர்த்தி ருத்ராட்ச அலங்காரத்துடன் முக்கிய வீதிகள் வழியாகத் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும்,பொதுமக்களும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்திவேலூர் திருஞான சம்பந்தர் மடாலய விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai