Enable Javscript for better performance
பொதுமக்கள் குறை தீர் கூட்டம்: 87 பேருக்கு புதிய குடும்ப அட்டை- Dinamani

சுடச்சுட

    

    பொதுமக்கள் குறை தீர் கூட்டம்: 87 பேருக்கு புதிய குடும்ப அட்டை

    By நாமக்கல்,  |   Published on : 06th January 2015 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 87 பேருக்குப் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

    பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    பல்வேறு உதவித்தொகைகள், புதிய குடும்ப அட்டைகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 393 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கிய ஆட்சியர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடித் தீர்வு கண்டு பயனாளிகளுக்கு உரிய நலத்திட்ட உதவிகள் கிடைத்திட விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பில் 11 நபர்கள், திருச்செங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பில் 53 நபர்கள், பரமத்திவேலூர் வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பில் 23 நபர்கள் என மொத்தம் 87 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுப்புலட்சுமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) த.சபாபதி, மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.என்.பாலசுப்பிரமணியன், தனித்துணை ஆட்சியர் (சிறப்புத் திட்டங்கள்) எஸ்.சூரியபிரகாஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எஸ்.ராஜேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொறுப்பு) பெ.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai