சுடச்சுட

    

    ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கான தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    ராசிபுரம் நகராட்சியின் 8-ஆவது வார்டில் நடைபெற்ற விழாவில் வார்டில் உள்ள 982 குடும்ப அட்டைதாரர்களுக்கு நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் பணியைத் தொடக்கி வைத்தார்.

    8-ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஆர்.பி.சீனிவாசன் வரவேற்றார். நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.வெங்கடாஜலம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் ஆர்.கோபால், நகர்மன்ற உறுப்பினர்கள் டி.வி.தங்கமணி, முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai