Enable Javscript for better performance
கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு:  கட்டடப் பொறியாளர்கள்  உண்ணாவிரதப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு:  கட்டடப் பொறியாளர்கள்  உண்ணாவிரதப் போராட்டம்

    By  நாமக்கல்,  |   Published on : 07th January 2015 01:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு கட்டடப் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்ட கட்டடப் பொறியாளர்கள் சங்கத் தலைவர் என்.செல்வக்குமார் தலைமை வகித்தார்.
     சிமெண்ட் விலையேற்றத்தால் கட்டுமானத் தொழில் சரிவு நிலையில் உள்ளது. ஒரே மாதத்தில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ. 50-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை விலை மேலும் உயர்ந்து ரூ. 400-ஐத் தாண்டும் என சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் அதிகம் பாதிப்பிற்குள்ளாவர். இதனால் சிமெண்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
     தமிழ் மாநில கட்டுமானத் தொழிலாளர் நலச்சங்கம், மாவட்ட தனியார் மின் பணியாளர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai