Enable Javscript for better performance
நாமக்கல்லில் விவசாயிகள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விவசாய நிலங்களைக் கையகப்படுத்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தத்தைக் கண்டித்து, சட்ட உத்தரவு நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தபோதிலும், விவசாயிகள் உத்தரவு நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
     தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாமக்கல் அண்ணா சிலை அருகே செவ்வாய்க்கிழமை மாலை நடந்த போராட்டத்துக்கு எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் எஸ்.செலாமலை தலைமை வகித்தார்.
     மாநில பொதுச் செயலர் பி.சண்முகம், மாவட்டத் தலைவர் எ.ஆதிநாராயணன், செயலர் பி.பெருமாள், துணைத் தலைவர் கே.பூபதி, துணைச் செயலர் பி.ராமசாமி, பொருளர் சி.ரங்கசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.செங்கோடன், செயலர் சி.துரைசாமி, ஆர்.தங்கவேல், ஜெயமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai