சுடச்சுட

    

    நாமக்கல் சுற்று வட்டப் பாதைத் திட்டத்தை  செயல்படுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

    By  நாமக்கல்,  |   Published on : 07th January 2015 01:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் நகருக்கு வெளியே சுற்று வட்டப்பாதை அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கையெடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
     இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் நகர, ஒன்றிய மாநாடு கட்சியின் மூத்த உறுப்பினர் முத்துசாமி தலைமையில் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் எஸ்.மணிவேல், பொருளாளர் எஸ்.ஆர்.குழந்தான் ஆகியோர் பேசினர்.
     புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. நகரச் செயலராக ந.தம்பிராஜா, துணைச் செயலராக எஸ்.ஆர்.சேகர், பொருளராக வி.பழனியப்பன் மற்றும் 11 நகரக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்
     பட்டனர்.
     நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாமக்கல் நகரில் விதிகளை மீறி இயக்கப்படும் மணல் லாரிகள், கனரக வாகனங்களால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க விரைவாக நடவடிக்கை
     யெடுக்க வேண்டும்.
     நாமக்கல் மணிக்கூண்டுப் பகுதியில் போக்குவரத்தைச் சீரமைக்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
     நாமக்கல் நகரில் அரசு மருத்துவ, பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும். நாமக்கல் பேருந்து நிலையத்தை புறநகர்ப் பகுதிக்கு மாற்ற வேண்டும். நாமக்கல் நகருக்கு வெளியே சுற்று வட்டப்பாதை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கையெடுக்க வேண்டும். திருச்சி மற்றும் துறையூர் சாலைகளை அகலப்படுத்த வேண்டும்.
     நாமக்கல் நகரின் எல்லையில் உள்ள வகுரம்பட்டி ஊராட்சியை, நகராட்சியோடு இணைக்க வேண்டும். நாமக்கல் ரயில் நிலையத்துக்கு சேந்தமங்கலம் சாலை, கொசவம்பட்டி சாலை வழியாக அணுகுசாலை அமைத்து சிற்றுந்துகள், ஷேர் ஆட்டோக்களை ரயில் நிலையம் வரை இயக்க வேண்டும். நாமக்கல்லில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவுக்கு விரைவு ரயில், சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சி, மதுரைக்கு பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.
     லாரி கூண்டுத் தொழில் நிறுவனங்கள் ஒரே இடத்தில் அமைந்திட, நாமக்கல் புறநகர்ப் பகுதியில் ஆட்டோ நகர் அமைக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai