சுடச்சுட

    

    குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் புதன்கிழமை(ஜன.7) ஏலம் விடப்படுகின்றன.
     நாமக்கல் மாவட்ட எஸ்.பி எஸ்.ஆர்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 இரு சக்கர வாகனங்களை உரிய காலத்தில் அதன் உரிமையாளர்கள் யாரும் கேட்டு வரவில்லை. எனவே, அந்த வாகனங்கள் அரசு உடைமையாக்கப்பட்டு புதன்கிழமை காலை 10 மணிக்கு, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஏலத்தில் விடப்படுகிறது.
     இதே போல, மாவட்டத்தில் உள்ள பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 4 இரு மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்களும் ஏலம் விடப்படுகின்றன. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் உரிய தொகையுடன் வந்து ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai