சுடச்சுட

  

  1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து:  ஜன.18-இல் முதல்கட்ட முகாம்

  By  நாமக்கல்,  |   Published on : 07th January 2015 01:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
   நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத் துறை சார்பில், வரும்
   18-ஆம் தேதி மற்றும் பிப்ரவரி
   22-ஆம் தேதி ஆகிய இரு நாள்கள் 1,198 முகாம்களில் போலியோ தடுப்பு சொட்டுமருந்து வழங்கப்படுகிறது.
   இது குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
   இதில் ஆட்சியர் பேசியது: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்கு உள்பட்ட 1 லட்சத்து 51 ஆயிரத்து 498 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அதே போல் இந்த ஆண்டும், சுமார் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
   சொட்டு மருந்து வழங்க கிராமப் புறங்களில் 1,079 சிறப்பு முகாம், நகராட்சிப் பகுதியில் 119 சிறப்பு முகாம் என மொத்தம் 1,198 சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், திரை அரங்குகள், கோயில்கள், சுங்கச் சாவடிகள் போன்ற இடங்களில் 48 சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. 36 நடமாடும் குழுக்களும் அமைக்கப்படுகின்றன. சொட்டு மருந்து வழங்கும் பணியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4,935 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
   மாவட்டத்தில் உள்ள பெண்கள் தங்கள் வீடுகளில் உள்ள பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் முகாமுக்கு அழைத்து வந்து தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளவேண்டும் என்றார்.
   சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெமினி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai