சுடச்சுட

  

  ராசிபுரத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆட்டோ நிறுத்த இடம் ஒதுக்கித் தர வலியுறுத்தி, ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, போலீஸாருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

  ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர்களுக்கு இடம் ஒதுக்கித் தர வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன் உண்ணவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக ஆட்டோ தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர்.

  இதையடுத்து, சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர்கள் சங்க நிர்வாகி பி.சின்னுசாமி தலைமையில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டு போராட்டம் நடத்தினர். இதில், சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் எம்.எஸ்.ராஜேந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்டத் துணைத் தலைவர் எம்.ஜி.ராஜகோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.

  இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ராசிபுரம் டிஎஸ்பி வி.ராஜு பேச்சுவார்த்தை நடத்தினார். நாமக்கல் கோட்டாட்சியர் முன்னிலையில் வியாழக்கிழமை கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், போராட்டத்தை தொழிலாளர்கள் கைவிட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai