சுடச்சுட

    

    ஆனங்கூர் பகவதியம்மன் கோயில் தீ மிதித் திருவிழா

    By பரமத்தி வேலூர்  |   Published on : 08th January 2015 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் வட்டம், ஆனங்கூர் பகவதியம்மன் கோயில் தீ மிதித் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    ஆனங்கூரில் உள்ள பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை பக்தர்கள் காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் பகவதியம்மன் கோயிலை வந்தடைந்தனர். இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூச்சொரித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கள்கிழமை வடிசோறு நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை மாலை பக்தர்கள் காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி ஊர்வலமாக வந்து, கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    புதன்கிழமை இரவு பொங்கல், மாவிளக்கு நிகழ்ச்சியும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. வியாழக்கிழமை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பகவதியம்மன் கோயில் விழாக் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai