சுடச்சுட

    

    குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி போராட்டம்

    By நாமக்கல்  |   Published on : 08th January 2015 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் நகராட்சி குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி, கொசவம்பட்டியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

    நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட கொசவம்பட்டி 32ஆவது வார்டு பாரதியார்நகரில் நகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. மொத்தம் 16 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. நகரப் பகுதியில் சேகரமாகும் குப்பைகள் அங்கு கொட்டப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாகக் குப்பைக் கொட்டப்படுவதால், அங்கு மலைபோல் குப்பை குவிந்துள்ளது.

    குப்பைக் கிடங்கைச் சுற்றிலும் நகராட்சிக்கு உள்பட்ட 32, 33ஆவது வார்டுகளைச் சேர்ந்த பாரதிநகர், சத்யாநகர், காமராஜர்நகர் ஆகிய குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. மழைக் காலங்களில் குப்பைக் கிடங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், அவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நிலத்தில் இறங்குகிறது.

    பல ஆண்டுகளாக இதுபோல் இருப்பதால் குடியிருப்புப் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீரின் நிறம் பழுப்பு நிறத்தில் மாறியுள்ளதுடன், அவற்றைப் பயன்படுத்தும்போது பல்வேறு சரும நோய்களுக்கும் ஆளாவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், குப்பைக் கிடங்கின் ஒரு பகுதி தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், அந்தப் பகுதியில் இருந்த குப்பை அருகே உள்ள குடியிருப்புகளின் முன் சரிந்துள்ளது. நகராட்சி நிர்வாகத்தினரும் அதை சரி செய்ய முன்வரவில்லை.

    இதனால், புதன்கிழமை காலை நகராட்சி குப்பைக் கிடங்கின் முன் திரண்ட நுôற்றுக்கும் மேற்பட்ட மக்கள், அங்கு வந்த குப்பை லாரியைச் சிறைபிடித்தனர். மேலும், கிடங்கில் உள்ள குப்பையைச் சுத்தம் செய்யும் நுôதனப் போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர். அதற்கு கிடங்கினுள் இருந்த நகராட்சி ஊழியர்கள் அனுமதியளிக்கவில்லை. அதையடுத்து, குப்பைக் கிடங்கின் முன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இங்குள்ள குப்பைகளை அகற்றி வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    நகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்தனர். அதையேற்ற மக்கள், சிறிது நேர போராட்டத்துக்குப் பிறகு கலைந்தனர். எனினும், பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் ஒருங்கிணைந்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai