சுடச்சுட

    

    தனியார் துறை பாதுகாப்புப் பணி பயிற்சிக்கு விண்ணப்பம் விநியோகம்

    By நாமக்கல்  |   Published on : 08th January 2015 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் துறையில் பாதுகாப்பு சேவை பணி மேற்கொள்வது தொடர்பான பயிற்சிக்கு விண்ணப்பம் வழங்கல், சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது.

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் தனியார் துறையில் பாதுகாப்பு சேவைப் பணி மேற்கொள்வது குறித்து 21 நாள்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அந்தப் பயிற்சி காவல் துறையினருடன் இணைந்து வழங்கப்படஉள்ளது.

    இந்தப் பயிற்சிக்கான விண்ணப்பம் வழங்கல், சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எம்.மகேஸ்வரி

    தலைமை வகித்தார்.

    மாவட்டம் முழுவதும் இருந்து பயிற்சியில் பங்கேற்க வந்தவர்கள் விண்ணப்பங்களை பெற்று, நிறைவு செய்து வழங்கினர்.

    அதையடுத்து, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த முகாம் வியாழக்கிழமையும் நடைபெறவுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai