சுடச்சுட

    

    போச்சம்பள்ளி விற்பனைச் சங்கத்தில் ரூ.13 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

    By போச்சம்பள்ளி  |   Published on : 08th January 2015 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போச்சம்பள்ளி கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனைச் சங்கத்தில், 1,100 பருத்தி மூட்டைகள் ரூ. 13 லட்சத்துக்கு புதன்கிழமை ஏலம் போயின.

    போச்சம்பள்ளியில் எஸ்.495 கிருஷ்ணகிரி வட்ட வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் புதன்கிழமை 4-ஆவது வாரமாக பருத்தி ஏலம் நடைபெற்றது.

    ஏலத்துக்கு, வரலட்சுமி, பொன்னி ஆகிய ரகங்களைச் சேர்ந்த 1,100 பருத்தி மூட்டைகளை சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில், ஒரு குவிண்டால் வரலட்சுமி ரூ.4,500 முதல் ரூ.4,936 வரையும், பொன்னி ரூ. 3,900 முதல் ரூ.4,090 வரையும் ஏலம் போயின. இதில், விற்பனைக்கு வந்த 1,100 பருத்தி மூட்டைகளும் ரூ. 13 லட்சத்துக்கு ஏலம் போயின.

    ஏலத்துக்கு, சேலம், அரூர், அவிநாசி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து விற்பனைச் சங்கத் தலைவர் தூயமணி கூறியது:

    கடந்த வாரம் புதன்கிழமை 550 பருத்தி மூட்டைகள் ஏலத்துக்கு வந்தன. இவை ரூ.9.40 லட்சத்துக்கு ஏலம் போயின. புதன்கிழமை இரு மடங்காக 1,100 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போயின. விவசாயிகளுக்கு ஏலம் முடிந்ததும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai