முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
By நாமக்கல், | Published on : 08th January 2015 03:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில், 2014-2015ஆம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான தடகளம், கூடைப்பந்து, கையுந்துப் பந்து, வலைக்கோல் பந்து, கால்பந்து, கபடி, நீச்சல், டென்னிஸ், மேசை பந்து, இறகுப் பந்து ஆகிய விளையாட்டுகள் நடைபெற உள்ளன.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கங்கில் வரும் 9, 10ஆம் தேதிகளில் வாலிபால், கால்பந்து, ஹாக்கி, கபடிப் போட்டிகள் நடைபெறுகின்றன. 10ஆம் தேதி தடகளப் போட்டி நடைபெறுகிறது.
9ஆம் தேதி நாமக்கல் நகர் பகுதியில் உள்ள ஆபிசர்ஸ் கிளப்பில் டென்னிஸ், விக்டோரியா அரங்கில் இறகுப் பந்து, மேஜை பந்து, 11ஆம் தேதி பள்ளிக்காபாளையம் இண்டர்நேசனல் பள்ளியில் நீச்சல் போட்டி, 12ஆம் தேதி பாச்சல் பாவை பொறியியல் கல்லூரியில் கூடைப் பந்து ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன.