சுடச்சுட

  

  ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க முறை திட்டத்தின் கீழ் குழு சார்ந்த நிரந்தரப் பயணத் திட்டம் தொடக்க விழா மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆரியூர், ஒருவந்தூர் ஊராட்சிகளில் அண்மையில் தொடக்கிவைக்கப்பட்டது.

  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) லோகநாத பிரகாசம் முன்னிலை வகித்தார். குழு சார்ந்த நிரந்தரப் பயணத் திட்டம், வேளாண் உதவி அலுவலர் பணிகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.

  மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள், விவசாயிகளுக்குத் தேவையான உயர் தொழில்நுட்பங்கள், அரசு வழங்கும் மானியத் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

  மோகனூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் கந்தசாமி, வேளாண் அலுவலர் ஹேமலதா ஆகியோர் அரசின் பல்வேறு திட்டங்கள், செயல் விளக்கத் திடல், விதைப் பண்ணை அமைப்பால் ஏற்படும் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் மோகன்ராஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai