சுடச்சுட

    

    அரசு அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி தொடக்கம்

    By நாமக்கல்  |   Published on : 09th January 2015 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை, பேரிடர் தணிக்கும் துறையின் சார்பில், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் நிலையிலான அனைத்துத் துறை அலுவலர்களுக்கான பேரிடர் மேலாண்மை குறித்த 2 நாள் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் வியாழக்கிழமை தொடங்கியது.

    இந்தப் பயிற்சி முகாமை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பேசியது: இயற்கையின் இடர்பாடுகள், பேரழிவுகள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். அதை எதிர்கொள்ள நாம் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    பேரிடர் காலங்களில் துறை அலுவலர்கள் எவ்வாறு இந்தப் பணியை மேற்கொள்வது என்பது குறித்த பயிற்சி இரண்டு நாள்கள் அளிக்கப்படுகிறது. இதை அலுவலர்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்தப் பயிற்சியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினர் எஸ்.லாரன்ஸ், பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி அளித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வே.ரா. சுப்புலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.சாந்தி உள்பட வருவாய்த் துறை, தீயணைப்பு மீட்பு பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai