சுடச்சுட

  

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தினர் 50 பேரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

  அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி. வெங்கடாசலம் தலைமை வகித்தார். செயலாளர் கு. ராஜேந்திர பிரசாத் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

  ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். நேரடி உதவியாளர்களுக்கு பணி விதிகளை உருவாக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அலுவலக உதவியாளர்களுக்கு தர ஊதியம் ரூ. 400 உயர்த்த வேண்டும் என்பன உள்பட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கம் எழுப்பியபடி மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

  அவர்களை காவல் துணைக் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்தனர். மொத்தம் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai