சுடச்சுட

    

    ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    By பரமத்திவேலூர்,  |   Published on : 09th January 2015 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி, வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொத்தனூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன் கபிலர்மலை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாரத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டார துணைத் தலைவர் ரவிக்குமார் வரவேற்றுப் பேசினார்.

    வட்டாரத் துணைத் தலைவர்கள் குணசங்கரன், கனகலட்சுமி, செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமத்தி வட்டாரச் செயலாளர் மேதஷ், மாவட்டத் துணைத் தலைவர் சாந்தி, திருச்செங்கோடு வட்டாரச் செயலாளர் திருவேங்கடம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கோரிக்கைகளை வழியுறுத்தி, வட்டாரச் செயலர் சங்கர், மாவட்டப் பொருளாளர் ஹரிஹரன் ஆகியோர் பேசினர். முடிவில் வட்டாரப் பொருளாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai