சுடச்சுட

    

    குமாரபாளையம் கல்லூரியில் வேலைவாய்ப்பு வளாகத் தேர்வு

    By குமாரபாளையம்,  |   Published on : 09th January 2015 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் எக்ஸல் மேலாண்மைக் கல்லூரியில் சென்னை விப்ரோ டெக்கனாலஜீ நிறுவனம் சார்பில், வேலைவாய்ப்பு வளாகத் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

    தொடக்க நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவர் ஏ.கே.நடேசன் தலைமை வகித்துப் பேசுகையில், விப்ரோ டெக்னாலஜீஸ் நிறுவனம் முதன் முறையாக எம்சிஏ மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கிறது. தொடர்ந்து நடைபெறவிருக்கும் தேர்வுகளில் 25 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவர்என்றார்.

    துணைத் தலைவர் என்.மதன்கார்த்திக், முதல்வர் ஆர்.அமுதன் முன்னிலை வகித்தனர். தொழிற்சாலை உறவுகள் மற்றும் ஆராய்ச்சி திட்ட இயக்குநர் டி.தேவகுமார் வரவேற்றார். எம்சிஏ இறுதியாண்டு படிக்கும் 60 சதவீத மதிப்பெண் பெற்றோர் இம்முகாமில் பங்கேற்றனர்.

    விப்ரோ நிறுவன வணிக செயலாண்மை பிரிவுத் தலைவர் விஸ்வநாதன், முதுநிலை மேலாளர் ரத்தீஷ் ராமதாஸ், மனிதவளப் பிரிவு அலுவலர்கள் அனந்த கிருஷ்ணன், தேவராஜ், சரோஜினி தேவி ஆகியோர் தேர்வை நடத்தினர். இதில், 233 மாணவ, மாணவியர் பங்கேற்றதில் இறுதியாக 42 பேர் பணி நியமனம் பெற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai