சுடச்சுட

    

    பரமத்திவேலூர் ஏலச் சந்தையில் தேங்காய் கொப்பரையின் விலை உயர்ந்துள்ளதால், தென்னை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர், கரூர் மாவட்டத்தில் இருந்து தேங்காய் கொப்பரைகள் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரில் செயல்பட்டு வரும் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் குழு மையத்துக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகின்றன. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் கொப்பரை விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் கொப்பரை கிலோ ரூ.80.26-வுக்கு ஏலம் போனது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 481 கிலோ விற்பனைக்கு வந்திருந்தது. இதில், கிலோ ஒன்று ரூ.90.15-க்கு ஏலம் போனது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai