சுடச்சுட

    

    தொற்றா நோய்களுக்கு சிறப்பு முகாமில் பரிசோதனை

    By நாமக்கல்,  |   Published on : 09th January 2015 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிராம மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், அனைத்துவித தொற்றா நோய்களுக்கும் சிறப்பு முகாமில் பரிசோதனை நடத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

    மலைக் கிராமங்கள், மருத்துவ வசதி எளிதில் கிடைக்காத ஊர்களில் சுகாதாரத் துறை சார்பில், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், அந்தந்த வட்டார மருத்துவ அலுவலர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேரடியாக சம்பந்தப்பட்ட ஊருக்கு சென்று மருத்துவப் பரிசோதனை நடத்துவார்கள்.

    அப்போது, ரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய் ஆகியவற்றுக்கு பரிசோதனை செய்யப்படுகின்றது. குழந்தைகள், பெண்களை தாக்கும் நோய்கள் தொடர்பாகவும் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், பரிசோதனையின் போது அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்கவும் பரிந்துரை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில், சிறப்பு மருத்துவ முகாமில் அனைத்து விதமான தொற்றா நோய்களுக்கும் பரிசோதனை நடத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கர்ப்பப்பை, வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், சர்க்கரை நோய் போன்றவற்றுக்கும் இந்த சிறப்பு முகாம்களில் பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.

    இந்த நோய்களுக்கு இதுவரை அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுகாதாரத் துறையின் புதிய உத்தரவு மூலம் கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள், தங்களுடைய ஊரிலேயே பரிசோதனை செய்து கொள்ளலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai