Enable Javscript for better performance
பணிமூப்பு பட்டியல் வெளியிட உதவி வேளாண் அலுவலர்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பணிமூப்பு பட்டியல் வெளியிட உதவி வேளாண் அலுவலர்கள் கோரிக்கை

    By நாமக்கல்  |   Published on : 09th January 2015 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணிமூப்பு பட்டியல் வெளியிட வேண்டும் என உதவி வேளாண் அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர்கள் சங்க மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மற்றும் நாமக்கல், பரமத்திவேலூர் கோட்ட அளவிலான ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். செயலர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். மாநில இணைச்செயலர் பாஸ்கர், சேலம், நாமக்கல் மாவட்ட வேளாண் துறை பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.

    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எருமப்பட்டி அருகே அலங்காநத்தம் உதவி வேளாண் அலுவலர் அரசு குடியிருப்பு மிகவும் பழுதடைந்து குடியிருக்க முடியாத நிலையில் காணப்படுகிறது. இதைச் சீரமைக்க வேண்டும்.

    கடந்த 2009, 2011ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த உதவி வேளாண் அலுவலர்களுக்கு பணி மூப்பு பட்டியல் தயாரித்து வெளியிட வேண்டும். விவசாயிகள் சார்ந்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க முறை திட்டத்தில் குழுசார்ந்த நிரந்தரப் பயணத் திட்டம் கடந்த 5ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    அதில், உதவி வேளாண் அலுவலர்கள் கிராமங்களுக்கு நிரந்தரப் பயணத் திட்டம் செல்வதால் கிடங்கு மேலாளர், உதவி விதை அலுவலர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai