சுடச்சுட

    

    பால் விற்பனை மையங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

    By நாமக்கல்,  |   Published on : 09th January 2015 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல்லில் உள்ள பால் விற்பனை மையங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

    மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு மருந்து நிர்வாக் துறை மாவட்ட நியமன அலுவலர் கே.தமிழ்ச்செல்வன் தலைமையில் நாமக்கல்லில் உள்ள பால் விற்பனை மையங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பாலமுருகன், ராமசுப்பிரமணியன், நரசிம்மன், செந்தில், ராமசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    சந்தைப்பேட்டை புதூர், பெரியபட்டி சாலைப் பகுதியில் உள்ள பால் விற்பனை மையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சந்தேகத்தின் அடிப்படையில் பால் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பபட்டுள்ளது.

    ஆய்வில் தரமற்ற, கலப்பட பால் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தால் உணவுப் பாதுகாப்பு, தரங்கள் சட்டம் 2006-ன் படி நடவடிக்கையெடுக்கப்படும் என தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai