சுடச்சுட

    

    பரமத்திவேலூர் வட்டம், பிலிக்கல்பாளையம் ஏலச் சந்தைக்கு புதன்கிழமை அதிக வெல்லம் கொண்டுவரப்பட்டது.

    பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தைக்கு 11 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும் (30 கிலோ கொண்ட ஒரு மூட்டை), 13 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

    கடந்த வாரம் உருண்டை, அச்சு வெல்லம் ஆகிய இரண்டும் சேர்ந்து 20 ஆயிரம் வெல்ல சிப்பங்கள் மட்டுமே ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

    பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 24 ஆயிரம் வெல்ல சிப்பங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.

    வெல்லம் ஏலம் எடுப்பதற்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் வெல்லம் விலையும் உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு வெல்லம் 30 கிலோ கொண்ட சிப்பம் ஒன்று ரூ.1200-க்கும், அச்சு வெல்லம் ரூ.1130-க்கும் ஏலம் போனது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு வெல்லம் ரூ.1250-க்கும், அச்சு வெல்லம் ரூ.1300-க்கும் ஏலம் போனது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெல்லம் விலை உயர்ந்துள்ளதால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகளும், வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai