சுடச்சுட

  

  கொல்லிமலையில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் ரூ.78 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

  நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதியில் பொதுப் பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, கல்வித் துறை ஆகிய துறைகளின் மூலம் முடிக்கப்பட்டுள்ள பணிகள், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

  கொல்லிமலை வாழவந்திநாடு பகுதியில் கட்டப்பட்டு வரும் மாதிரிப் பள்ளியின் மாணவியர் விடுதி, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் சார்பில் கட்டப்பட்டு வரும் மூன்றடுக்கு மாதிரிப் பள்ளி, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், எடப்புளிநாடு செங்கரையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணி, தார்ச் சாலைப் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்டார்.

  அப்போது அவர் கூறியது: கொல்லிமலையில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை சார்பில், கடந்த 2012-13 நிதியாண்டில் ரூ.24.90 கோடி மதிப்பீட்டில் 1,460 பணிகளும், 2013-14 நிதியாண்டில் ரூ.37.22 கோடி மதிப்பீட்டில் 1,513 பணிகளும், 2014-15 நிதியாண்டில் ஆண்டில் ரூ.15.81 கோடி மதிப்பீட்டில் 1,242 பணிகளும் என மொத்தம் இந்த 3 ஆண்டுகளில் ரூ.77.92 கோடி மதிப்பீட்டில் 4,215 பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சில பணிகள் நடைபெற்று வருகின்றன.

  முதல்வரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் மட்டும் 2012-13 நிதியாண்டில் 210 பசுமை வீடுகளும், 2013-14 நிதியாண்டில் 198 பசுமை வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2014-15 நிதியாண்டில் ரூ.2.31 கோடி மதிப்பீட்டில் 128 பசுமை வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

  இவற்றில் பெரும்பாலான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. சில வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மக்களின் நலனுக்காக உருவாக்கி தரப்படுகின்ற திட்டங்கள், திட்டப் பணிகளை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

  ஆய்வின் போது கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சந்திரசேகர், பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் தொல்காப்பியன், இளநிலைப் பொறியாளர் பெரியசாமி, கொல்லிமலை வட்டாட்சியர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கமலக்கண்ணன், தெய்வானை ஆகியோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai