சுடச்சுட

    

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பரமத்தி வட்டார வள மையத்தில் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான அறிவியல் பயிற்சி 3 நாள்கள் நடைபெற்றது.

    வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஜெயந்தி பயிற்சியைத் தொடக்கி வைத்தார். 6,7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் சோதனைகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்த மூன்று பருவங்களுக்கும் பயிற்சி நடைபெற்றது. இதில் 37 உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    மரத்தின் வயது கண்டறிதல், தாவரங்களின் வேர், இலைத் துளையின் அமைப்பு, வேதிவினைகள், அமிலம், காரங்களின் பண்புகள், மின் மோட்டார் செயல்படும் விதம், தீயணைப்பான் செயல்படும் விதம் போன்ற பல சோதனைகள் செய்து காட்டப்பட்டன. ஆசிரிய பயிற்றுனர் நிர்மலாதேவி மற்றும் ஆசிரியைகள் பயிற்சி அளித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai