Enable Javscript for better performance
இளைஞர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    குமாரபாளையம் அருகே தீராத வயிற்றுவலியால் மனமுடைந்த இளைஞர் பெயிண்டைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

    குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கணேசன் மகன் தங்கவேல் (32). திருமணமான இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

     இதனால், மனமுடைந்த தங்கவேல், மரத்துக்கு அடிக்கும் பெயிண்டைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கவலைக்கிடமான நிலையில் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தங்கவேல், வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். குமாரபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai