சுடச்சுட

    

    எம்ப்ராய்டரி வேலை கற்க விரும்பும் பெண்கள் கவனத்துக்கு...

    By நாமக்கல்  |   Published on : 10th January 2015 10:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எம்ப்ராய்டரி வேலைப்பாடு குறித்த இலவசப் பயிற்சி முகாமில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவன, நாமக்கல் கிளை இயக்குநர் ராஜு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சிக்கான செலவு, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். ஆர்ய எம்ப்ராய்டரி வேலைப்பாடு, சுடிதார், சேலை, ஜாக்கெட் உள்ளிட்ட பெண்கள் சார்ந்த ஆடைகளை அழகிய வேலைப்பாடுகளுடன் தயாரிப்பது குறித்து நவீன முறையில் பயிற்சி வழங்கப்படும். 

    குறைந்தபட்ச முதலீட்டில் மாதம் ரூ.10 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் வரும் 13-ஆம் தேதிக்குள் இயக்குநர், இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனம், 3151 ரவின் பிளாசா, திருச்சி சாலை, நாமக்கல் என்ற முகவரிக்கு நேரில் அல்லது கடிதம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு, 04286-221004 என்ற தொலைபேசி எண் மற்றும் 89030 13980, 94432 40899 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai