Enable Javscript for better performance
கார் கவிழ்ந்து ஐயப்ப பக்தர்கள் இருவர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    கார் கவிழ்ந்து ஐயப்ப பக்தர்கள் இருவர் காயம்

    By பரமத்திவேலூர்  |   Published on : 10th January 2015 10:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்ததில் ஹைதராபாதைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

    ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே அசம்பளி பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினர் சபரிமலைக்கு ஒரு காரில் வியாழக்கிழமை இரவு நாமக்கல், கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். பரமத்திவேலூரில் இருந்து அனிச்சம்பாளையம் செல்லும் பிரிவுச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் சாலையைக் கடந்துள்ளார்.

    இதனால், இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக இடது புறமாக ஓட்டுனர் மைபால்ரெட்டி (35) காரைத் திருப்பியுள்ளார். இதில் நிலை தடுமாறி அருகே இருந்த தடுப்புக் கம்பியைத் தாண்டி 15 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் காரின் ஓட்டுனர் மைபால்ரெட்டி, காரிலிருந்த சாஸ்டி (33) ஆகியோர் பலத்த  காயமடைந்தனர்.

    இருவரும் பரமத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பரமத்திவேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai