சுடச்சுட

    

    கோழித் தீவன மூலப்பொருள்களில் நோய்க் கிருமி தொற்றுக்கான வாய்ப்பு இருப்பதால், ஆய்வகத்தில் பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்த வேண்டும் என கோழிப்பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்தி: அடுத்த நான்கு நாள்களுக்கு வானம் பொதுவாகத் தெளிவாகவும், மழையற்றும் காணப்படும். காற்று மற்றும் வெப்ப நிலையும் இயல்பாகவே இருக்கும் என்பதால்,  கோழிகளில் தீவன எடுப்பு இயல்பை ஒட்டியே காணப்படும்

    வரும் நாள்களில் பின்பனிக்காலம் துவங்கிய பின்னர் குறைந்தபட்ச வெப்ப அளவு குறைய வாய்ப்புள்ளதால், பண்ணையாளர்கள் உயர்மனைகளின் பக்கவாட்டில் தொடர்ந்து படுதாவைப் பயன்படுத்தி வருவதன்மூலம் தீவன எடுப்பைக் கட்டுப்படுத்துவதோடு, தீவன விரயத்தையும் குறைக்கலாம்.

    கோழியின ஆய்வகத்தில் கடந்த வாரம் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் இறக்கை அழுகல் மற்றும் சுவாசப் பாதை நோய்களால் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆகவே, பண்ணையாளர்கள் தீவன மூலப்பொருள்களில் கிளாஸ்ட்ரிடியம் கிருமி மாசுபாடு உள்ளதா என ஆய்வகத்தில் ஆய்வு செய்து. தரமான மூலப்பொருள்களை உபயோகிப்பதுடன், பண்ணை உயிர்ப் பாதுகாப்பு முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai