சுடச்சுட

    

    திருச்செங்கோட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரித் தேர்வு

    By நாமக்கல்  |   Published on : 10th January 2015 10:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு பகுதியில் உள்ள 19 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1000-க்கும் மேற்பட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரிப் பொதுத் தேர்வு வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

    திருச்செங்கோடு ஜேசிஐ டெம்பிள் மற்றும் சைன்வி கம்ப்யூட்டர் நிறுவனம் சார்பில்   கணக்கு மற்றும் கணக்குப் பதிவியல் பாடங்களில் மாதிரி பொதுத்தேர்வு வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

    இத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ.1,000  பரிசு, சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்படும். தேர்வு மையத்தில் தலைவர் சதாசிவம், துணைத் தலைவர்கள் சக்திவேல், கவிக்குமார், சங்கர், தினேஷ், பூபதி பாலாஜி கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக மண்டல இயக்குநர் கிருத்திகா கோவிந்தசாமி தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai