Enable Javscript for better performance
புகையில்லாப் பொங்கல் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    புகையில்லாப் பொங்கல் விழிப்புணர்வுப் பேரணி

    By பரமத்திவேலூர்  |   Published on : 10th January 2015 10:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மற்றும் பொத்தனூர் பேரூராட்சிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகை, மாசில்லாப் பொங்கல் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    பொத்தனூர் தேர்வுநிலை பேரூராட்சியில் புகை, மாசில்லாத போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் நாராயணன் பேரணியைத் தொடக்கி வைத்தார்.

    துணைத் தலைவர், உறுப்பினர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், தேசிய பசுமைப்படை மாணவர்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர், பொது சுகாதார அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.

    பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பேரூராட்சி வளாகத்தை அடைந்தது.

    போகிப்பண்டிகையில் டயர், பிளாஸ்டிக் மற்றும் பழைய பொருள்களை எரிப்பதைத் தவிர்ப்போம், காற்று மற்றும் நீர் நிலைகளை மாசுபடுத்தலைத் தடுப்போம், இயற்கை வளங்கள் மற்றும் மரங்களை அழிக்கக் கூடாது, மறுசுழற்சியில் பயன்படும் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணியாளர்கள் வசம் ஒப்படைப்போம், புகையில்லாப் பொங்கலைக் கொண்டாடுவோம் உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    வேலூர் பேரூராட்சி சார்பில் கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற புகையில்லா போகிப் பண்டிகை குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் சந்திரன் கூட்டத்தில் புகையில்லாப் பொங்கல் தினம் குறித்த பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்த செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

    பள்ளித் தலைமை ஆசிரியர் சாய்பிரசாத், துப்புரவு ஆய்வாளர் இராஜ கணபதி, துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai