சுடச்சுட

    

    ராசிபுரம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    காக்காவேரி, பட்டணம், குச்சிக்காடு பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் பணி துவங்கியது. நாமக்கல் மக்களவை  உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், பயனாளிகளுக்கு இதனை வழங்கித் தொடக்கி வைத்தார்.

    மொத்தம் 1,110 பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.  ராசிபுரம் ஒன்றிய அட்மா திட்டத் தலைவர் எம்.காளியப்பன், ராசிபுரம் வட்டாட்சியர் ஜி.ராஜா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai