சுடச்சுட

    

    மண்டல கூடைப்பந்து: பாவை பாலிடெக்னிக் சாம்பியன்

    By ராசிபுரம்  |   Published on : 10th January 2015 10:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மண்டல பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் பாவை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    சேலம் மண்டல பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி பாவை பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் சேலம் மண்டலத்தைச் சேர்ந்த 10 பாலிடெக்னிக் கல்லூரி அணிகள் பங்கேற்றன.

    இதில் பாவை பாலிடெக்னிக் கல்லூரி அணி தொடர்ந்து 5-ஆம் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    சேலம் தியாகராஜா பாலிடெக்னிக் கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும், சிஎஸ்ஐ  பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாம் இடத்தையும், பாவை வரம் பாலிடெக்னிக் அணி நான்காம் இடத்தையும் பிடித்தன.

    கல்வி நிறுவன இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில், பாலிடெக்னிக் டீன் பி.எஸ்.சுப்ரமணியம், முதல்வர் ஏ.சி.செüந்தரராஜன், உடல்கல்வி இயக்குனர் என்.சந்தானராஜா ஆகியோர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்று கோப்பைகளை வழங்கினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai